கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு வருவதனால் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.டெங்கு நோய் தடுப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று(9.7.2026) கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்றபோதே இந்த விடய…

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு வருவதனால் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.டெங்கு நோய் தடுப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று(9.7.2026) கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்றபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.யூன் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக பல்கலைக்கழக கல்விக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்லும் மாணவர்களிடம் அதிகம் பதிவாகியுள்ளது.அறிவுறுத்தல்

மாவட்டத்தில் டெங்கு பரவலை தடுக்கும் வகையில் வீட்டை சுற்றி தேங்கும் நீரை அகற்காதல் கொசு வலை பயன்படுத்துமாறும் காய்சல், உடல்வலி இருந்தால் உடனே வைத்தியரை அணுகுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

குறித்த கலந்துரைடலில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் பிரதேச சபைகள் அனர்த்த முகாமைத்துவ பிரிவு முப்படையினர் துறைசார் திணைக்களங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.