அண்மைக்காலங்களாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மாவட்ட அபிவிருத்தி கூட்த்திலும், பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் குழப்பங்களை விளைவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தநிலையிலே, கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றையதினம் தினம்(16) நடைபெற்று…

அண்மைக்காலங்களாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மாவட்ட அபிவிருத்தி கூட்த்திலும், பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் குழப்பங்களை விளைவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தநிலையிலே, கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றையதினம் தினம்(16) நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை இடை நடுவே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டு அவர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.தொடர்ந்து பொது அமைப்புகள் மற்றும் தவிசாளர்களை இடையே ஏற்பட்ட வாய்த்தக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் இடைநடுவே வெளிநடப்பு செய்ததை அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து அரச திணைக்க அதிகாரிகளும் வெளியேறியதை அடுத்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடை நடுவே நிறுத்தப்பட்டது.  அத்தோடு, அர்ச்சுனாவின் தகாத நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.இந்த விடயங்கள் தொடர்பான விரிவான தகவல்களை நாட்டுநடப்பு நிகழ்ச்சியில் காணலாம்.