நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட குழுவின் முன்னிலையில், நீதி அமைச்சர் தனது பொறுப்பை விளக்க வேண்டியது அவசியம் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில்…
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட குழுவின் முன்னிலையில், நீதி அமைச்சர் தனது பொறுப்பை விளக்க வேண்டியது அவசியம் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய விடயமே, இன்று கோடாரியால் வெட்டும் அளவுக்குப் பெரிய அனர்த்தமாக மாறியுள்ளது. இச்சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்பது?” என பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) அன்று வினவினார்.
முன்னாள் நீதியரசர்களை உள்ளடக்கிய விசாரணைக் குழுவின் முன்னிலையில் நீதி அமைச்சர் ஆஜராகி, சிறைச்சாலை நெருக்கடிகளைத் தடுப்பதில் தாம் எடுத்த நடவடிக்கைகள் குறித்துப் பதிலளிக்க வேண்டும். அமைச்சுப் பதவியில் தொடர்ந்துகொண்டு இந்த விசாரணையை எதிர்கொள்வது பொருத்தமற்றது என்பதால், விசாரணை முடியும் வரை அவர் தற்காலிகமாகப் பதவியிலிருந்து விலக வேண்டும் எனத் தெரிவித்தார். கடந்த காலத்தில் முன்மாதிரியாகச் செயற்படுவதாகக் கூறிய அரசு, இப்போது அதற்கேற்ப நீதி அமைச்சரை விலகச் செய்து, புதிய அரசியல் கலாச்சாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் முஜிபூர் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

