கிண்ணியா-சின்னத் தோட்ட மக்களின் இந்து மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி போராட்டம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join -மூதூர் நிருபர்- கிண்ணியா நகர சபை பிரிவுக்குட்பட்ட சின்னத் தோட்டப் பிரதேச மக்களின் இந்து மயானப் பிரச்சினைகள…

கிண்ணியா-சின்னத் தோட்ட மக்களின் இந்து மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி போராட்டம்

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

-மூதூர் நிருபர்-

கிண்ணியா நகர சபை பிரிவுக்குட்பட்ட சின்னத் தோட்டப் பிரதேச மக்களின் இந்து மயானப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் இன்று தங்களின் வேலைநிறுத்த மற்றும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை – கிண்ணியா நகர சபையினால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சின்னத் தோட்டம் பகுதியில் கழிவு முகாமைத்துவத் தளம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தளத்தை உடனடியாக அவ்விடத்திலிருந்து அகற்றக் கோரியும், குப்பைகளைக் கொட்டுவதற்கு மாற்று இடமொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுமே சின்னத் தோட்ட மக்கள், இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு தொடர்ச்சியாகக் கழிவுகள் கொட்டப்படுவதனால், அருகில் உள்ள இந்து மயானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இதனால் ஏற்படும் கடும் துர்நாற்றம் மற்றும் குப்பைகளின் விசிறல் காரணமாகவும், கழிவுகளால் கவரப்பட்டு வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாகவும், இறந்தவர்களின் சடலங்களை நிம்மதியாக அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த கிண்ணியா நகர சபை தவிசாளர் எம். எம். மஹ்தி, பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். மயானப் பகுதியில் குப்பை கொட்டுவதை நிறுத்துதல், உடைந்துள்ள மதில்களைப் புனரமைத்தல் மற்றும் அந்த இடத்தை மயானத்திற்கே முழுமையாக ஒதுக்குதல் போன்ற கோரிக்கைகள் தவிசாளரிடம் முன்வைக்கப்பட்டன.

நகர சபை தவிசாளர் எம். எம். மஹ்தி ஊடகங்களுக்குப் பதிலளிக்கும் போது,

எந்தவொரு தரப்பினரின் மத வழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் எவரும் தடையாக இருக்கக் கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக தவிசாளர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, தற்காலிகமாகப் போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை தாங்கள் அவதானத்துடன் இருக்கப் போவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்