Colombo (News 1st) கிரிபத்கொடை - திக்பிட்டிகொட பிரதேசத்தில் 8 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்றிரவு(18) மேற்கொ…
Colombo (News 1st) கிரிபத்கொடை - திக்பிட்டிகொட பிரதேசத்தில் 8 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்றிரவு(18) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது 6 கிலோ 96 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 2 கிலோ 70 கிராம் ஹெரோயின் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேகநபரிடமிருந்து 5000 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திப்பிட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவராவார். இதேவேளை, பாணந்துறை - அலுபோமுல்ல பிரதேசத்தில் 18 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் நேற்று(18) கைது செய்யப்பட்டிருந்தார்.

-557606_850x460.jpg)