கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற 2026 மாகாண மட்ட பந்து (Handball) போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்து தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன. இதன்படி, 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் மட்/ மமே/ கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்திய…

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற 2026 மாகாண மட்ட பந்து (Handball) போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்து தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.

இதன்படி, 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் மட்/ மமே/ கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட பந்து (Handball) போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.

அதேவேளை, 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் மட்/ மமே/ வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம் கிண்ணத்தை வென்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம், பரமேஸ்வரா வித்தியாலயத்தின் பெண்கள் அணி தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக மாகாண சம்பியனாக தெரிவாகியுள்ளதுடன், தேசிய மட்ட போட்டிகளில் நான்காவது முறையாக பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண மட்டத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய மட்டக்களப்பு பாடசாலை அணிகளின் இந்த சாதனை, பாடசாலை விளையாட்டுத் துறையில் புதிய ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.