கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி வந்த இருவரை மண்முனைபற்று வாவிக்கரையில் வைத்து இன்று புதன்கிழமை (08) 800 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்று…

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி வந்த இருவரை மண்முனைபற்று வாவிக்கரையில் வைத்து இன்று புதன்கிழமை (08) 800 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அந்த பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தவராஜா றஜீவ்காந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியில் சம்பவ தினமான இன்று பகல் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு தோணில் கடத்தி கொண்டுவரப்பட்ட வாவிக்கரையில் வைக்கப்பட்ட கசிப்பை எடுத்துச் செல்ல வந்த இருவரை 800 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 25, 26 வயதுடையவர்கள் எனவும் கொக்கட்டிச்சோலை முனைக்காடு மற்றும் மாவிலங்குதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.