கொக்கட்டிச்சோலையில் இருந்து காஞ்சிரங்குடா வாவி ஊடாக ஆரையம்பதி பகுதிக்கு மீன்பிடித் தோணியில் 150 லீற்றர் கசிப்பை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 60 வயதுடைய ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கி…

கொக்கட்டிச்சோலையில் இருந்து காஞ்சிரங்குடா வாவி ஊடாக ஆரையம்பதி பகுதிக்கு மீன்பிடித் தோணியில் 150 லீற்றர் கசிப்பை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 60 வயதுடைய ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வேனுஜன் தலைமையிலான குழுவும், விசேட புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இன்று அதிகாலை 4.00 மணியளவில் காஞ்சிரங்குடா வாவிப் பகுதியில் சுற்றிவளைப்பு சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, கலன்களில் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 150 லீற்றர் கசிப்புடன் ஆரையம்பதி பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடித் தோணியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.