எபோலா வைரஸ் பாதிப்பு, தற்போது நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள 'ஹாட்-உலே' மற்றும் 'சோபோ' ஆகிய மேலும் இரண்டு மாகாணங்களுக்கும் வேகமாகப் பரவியுள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கொங்கோவில் பதிவாகியுள்ள எபோலாவின் 17ஆவது அலை இதுவாகும். தற்போ…

எபோலா வைரஸ் பாதிப்பு, தற்போது நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள 'ஹாட்-உலே' மற்றும் 'சோபோ' ஆகிய மேலும் இரண்டு மாகாணங்களுக்கும் வேகமாகப் பரவியுள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கொங்கோவில் பதிவாகியுள்ள எபோலாவின் 17ஆவது அலை இதுவாகும்.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,926 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது.தீவிர அறிகுறி பாதிக்கப்பட்ட மனிதர்கள் அல்லது விலங்குகளின் உடல் திரவங்கள் மூலமாக நேரடியாகப் பரவும் இந்த எபோலா வைரஸ், கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் உடலின் உட்புற, வெளிப்புறப் பகுதிகளில் இரத்தக்கசிவு போன்ற தீவிர அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடியது. புதிய மாகாணங்களில் கண்டறியப்பட்டுள்ள நோயாளிகள் அனைவரும் அண்டை மாகாணமான இத்தூரியிலிருந்து வந்தவர்கள் என்றாலும், நிலைமையின் தீவிரத்தைக் கருதி இந்த இரண்டு மாகாணங்களும் தற்போது எபோலா தொற்று மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய நோயாளிகளில் பலருக்கு ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாததால், எபோலா தொற்றின் உண்மையான பாதிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட 2 முதல் 4 மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.