நான்கு வருடங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு நாளில் மக்கள் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருக்கும் போதே துரத்தியடிக்கப்பட்டார். இலங்கை வரலாற்றிலே என்றும் இடம்பெறாத ஒரு சம்பவமாக பதிவாகியுள்ள இந்த அரகலய போராட்டம் இடம்ப…

நான்கு வருடங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு நாளில் மக்கள் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருக்கும் போதே துரத்தியடிக்கப்பட்டார்.

இலங்கை வரலாற்றிலே என்றும் இடம்பெறாத ஒரு சம்பவமாக பதிவாகியுள்ள இந்த அரகலய போராட்டம் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் இந்த விடயம் தொடர்பில் அன்றைய அரகலய போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஒரு முக்கிய நபரான டேனிஸ் அலி லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

அன்று தொடங்கிய போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நாங்கள் கேட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் அன்றைய போராட்டத்தில் நாங்கள் தோல்வி அடையவில்லை. வெற்றியையே நிலைநாட்டினோம். அன்று நாம் முன்வைத்திருந்த சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருந்த இன்னும் சில முக்கிய விடயங்களை இந்த நிகழ்ச்சியினூடாக விரிவாக பார்க்கலாம்..