மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், கொழும்பின் மதிப்புமிக்க நிலங்கள் (குறிப்பாக ஷங்க்ரி-லா ஹோட்டல் அமைந்திருக்கும் காலி முகத்திடல் பகுதி) வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்பட்டதில் பாரிய ஊழல் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நில ஒப்பந்தங்கள் மூலம் கிடைத்த கமிஷ…

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், கொழும்பின் மதிப்புமிக்க நிலங்கள் (குறிப்பாக ஷங்க்ரி-லா ஹோட்டல் அமைந்திருக்கும் காலி முகத்திடல் பகுதி) வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்பட்டதில் பாரிய ஊழல் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நில ஒப்பந்தங்கள் மூலம் கிடைத்த கமிஷன் தொகை, அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயரில் இருந்த தனிப்பட்ட வங்கி கணக்கிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், சீன முதலீட்டுத் திட்டமான 'போர்ட் சிட்டி' திட்டத்தில் சட்ட ஓட்டைகளைப்(Loopholes) பயன்படுத்தி நிலங்களை நிரந்தரமாக வழங்க முயற்சி செய்யப்பட்டதாகவும், இத்தகைய திட்டங்கள் நாட்டின் கடன் சுமைக்குக் காரணமாக அமைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை சட்டப்படி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நேரடியாக நிலங்களை விற்கவோ அல்லது நிரந்தர உரிமை வழங்கவோ முடியாது.

ஆனால், இது தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்ததால், பின்னர் வந்த நல்லாட்சி அரசாங்கம் அந்த ஒப்பந்தத்தை மாற்றி, 99 ஆண்டு கால குத்தகை முறைக்கு மாற்றியுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது Newsinsighttamil நிகழ்ச்சி...