முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிச் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று(08.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு இதன்…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிச் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று(08.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு இதன்போது, விளக்கமறியலில் உள்ள சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன், அவரை மேலும் ஜூலை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாங்க ஊதியங்கள் தொடர்பான முறைகேடுகள் குறித்த தொடர் விசாரணையின் தொடர்பில், சுகீஸ்வர பண்டார மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கடந்த ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்டார். ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து ஊதியம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.