கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல இரவு விடுதியொன்றில், சூதாட்டத்தின் போது 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அங்கு பணிபுரிந்த பெண் ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சீட்டுக்கட்டுகளைக் கையாள்வதன் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக…

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல இரவு விடுதியொன்றில், சூதாட்டத்தின் போது 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அங்கு பணிபுரிந்த பெண் ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீட்டுக்கட்டுகளைக் கையாள்வதன் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த விடுதிக்கு கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பொன்றை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இந்த மாபெரும் மோசடி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.மாபெரும் மோசடி

கைது செய்யப்பட்ட 21 வயதுடைய பெண் அத்திடிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார் என தெரியவந்துள்ளது. சூதாட்டத்தில் சீட்டுக்கட்டுகளைக் கலைக்கும்போது, அந்த பெண் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தெரியும்படி அதைக் கையாண்டு, அந்தத் தரவுகளைக் காணொளி எடுப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ளார்.

இவ்வாறு பெறப்பட்ட காணொளி காட்சிகளை பயன்படுத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் பெரும் தொகையை வென்றுள்ளார்.

அத்துடன், அதில் 5 கோடி ரூபாவை சந்தேகநபரான அந்தப் பெண்ணுக்கு பகிர்ந்தளித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகடந்த இரண்டரை மாதங்களாக திட்டமிட்டு இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த மேசையில் பணிபுரிந்த மேலும் ஐந்து ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.