கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பிட்டியில் மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர் மற்றும் குறித்த ஆசிரியை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தம்பதி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது…

கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பிட்டியில் மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர் மற்றும் குறித்த ஆசிரியை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரியும் 25 வயதுடைய மனைவி மற்றும் அவரது கணவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பதி கைதுசந்தேகநபரிடம் ஒரு கிலோகிராம் 06 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், ஆசிரியையான மனைவியிடம் 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வேன் ஒன்றின் முன்பக்கத்தில் வைத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, மாதம்பிட்டி பகுதியில் விநியோகிப்பதாக மாதம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய சந்தேகநபரான தம்பதியினர் மாதம்பிட்டி பகுதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வேனில் இருந்த தம்பதியினரை சோதனையிட்டபோது அவர்களிடம் இந்த போதைப்பொருள் கண்டுகிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இவை வத்தளை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.