நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் விசேட ஆலோசனை கூட்டமொன்று நடைபெறவுள்ளது.எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை கூட…
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் விசேட ஆலோசனை கூட்டமொன்று நடைபெறவுள்ளது.எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டம் நடைபெறவுள்ளது.முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்பு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில், முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்துக்கு செல்லவுள்ளார். சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர், அவரது அலுவலகத்துக்கு ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.அரசின் நகர்வுகள் குறித்து ஆராய்வு நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்கும் அரசின் நகர்வுகள் குறித்து ஆராய்வதற்கு, அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டமொன்றை கூட்டுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் எழுத்துமூலம் கோரியிருந்தார். அதனைத் தொடர்ந்து தொலைபேசி ஊடாகவும் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார். இதற்கிணங்க, எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் நாமல் ராஜபக்சவும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசின் இந்த ஓய்வு வயது நீடிப்புத் திட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கருதுவதால், இது குறித்த பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதற்காகவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

