கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மருதானை நோக்கி சென்ற ரயிலில் குறித்த நபர் மோதியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பம்பலப்பிட்ட…

கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மருதானை நோக்கி சென்ற ரயிலில் குறித்த நபர் மோதியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பிரேத அறைஇவ்வாறு உயிரிழந்தவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபரின் சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.