கொழும்பின் புறநகர் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில், நடத்தி செல்லப்பட்ட தகாத செயற்பாட்டு விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பெண்களை பயன்படுத்தி இந்த விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. பொரளஸ்கமுவ, திவுல்பட்டிய பிரதேசத்தில் நடத்திச் செல்…
கொழும்பின் புறநகர் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில், நடத்தி செல்லப்பட்ட தகாத செயற்பாட்டு விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பெண்களை பயன்படுத்தி இந்த விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
பொரளஸ்கமுவ, திவுல்பட்டிய பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட குறித்த விடுதி, நேற்று இரவு முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தகாத விடுதிஇந்த தகாத விடுதியை முகாமைத்துவம் செய்த சந்தேகநபர் மற்றும் சந்தேக நபர்களான மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர் 20 வயதுடைய மகுலுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் 34 வயதுடைய தாய்லாந்து நாட்டுப் பெண் என தெரியவந்துள்ளது.
ஏனைய இரு பெண் சந்தேக நபர்களும் 33 மற்றும் 36 வயதுடைய பொரளஸ்கமுவ மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பொரளஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

