கொழும்பு காணிப் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை மூன்றாம் தரப்பினருக்கு வழங்கி, திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு உதவிய குற்றச்சாட்டில், காணிப் பதிவாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கறுவாத்தோட்ட காவல்துறை பிரிவ…
கொழும்பு காணிப் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை மூன்றாம் தரப்பினருக்கு வழங்கி, திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு உதவிய குற்றச்சாட்டில், காணிப் பதிவாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கறுவாத்தோட்ட காவல்துறை பிரிவில் அமைந்துள்ள கொழும்பு காணிப் பதிவாளர் அலுவலகத்தின் காணிப் பதிவாளர் ஆவார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபரைக் விசாரணைக்காக அழைத்து வாக்குமூலம் பெற்றதன் பின்னர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர், கொழும்பு காணிப் பதிவாளராக இருந்துகொண்டு, அந்த அலுவலகத்தில் உள்ள பத்திரங்கள், ஆவணங்கள் மற்றும் உறுதிப்பத்திரங்களின் இரண்டாம் பக்கங்களில் உள்ள ஆவணங்களை மூன்றாம் தரப்பினருக்கு வழங்கி, திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு உதவி செய்தமை, போலியான ஆவணங்களைத் தயாரித்து சட்டபூர்வமான உரிமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பறித்தமை ஆகியவை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

