கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார். ந…

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.டெங்கு காய்ச்சல்எப்படியிருப்பினும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுமார் 70 மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தற்போது எவ்வித ஆலோசனைகளும் வழங்கப்படவில்லை என கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீ பிரதாபன் குறிப்பிட்டுள்ளார். டெங்கு காய்ச்சல் பரவல் காரணமாக கொழும்பில் உள்ள அழகியல் கலைகள் பல்கலைக்கழகம் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.