கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களைக் கடத்தி வர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று (14) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். ஹாங்காங்கிலிருந்து கேத்தே பசிபிக்…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களைக் கடத்தி வர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று (14) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாங்காங்கிலிருந்து கேத்தே பசிபிக் விமானம் (CX-611) மூலம் இன்று அதிகாலை 12:15 மணியளவில் குறித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் கொண்டு வந்திருந்த இரண்டு சூட்கேஸ்களைச் சோதனையிட்டபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பொட்டலங்களில் சுமார் 6 கிலோகிராம் மற்றும் 180 கிராம் எடையுள்ள 'குஷ்' (Kush) ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 61.8 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர் 63 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், அவர் கடத்தி வந்த போதைப்பொருள் கையிருப்பையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று, போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப் போலிஸார் தீர்மானித்துள்ளனர்.