லிந்துலை ஆக்ரா ஓயாவில் மூழ்கி காணாமல் போயுள்ள சிறுவன் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு…
லிந்துலை ஆக்ரா ஓயாவில் மூழ்கி காணாமல் போயுள்ள சிறுவன்
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு காணாமல் போன மாணவன் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் (வயது 15) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆக்ரா ஓயாவில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த மாணவன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் கடற்படை பிரிவின் நுவரெலியா பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

