தலவாக்கலை - லிந்துலை நகர சபைக்குள் நேற்று(09.07.2026) சபை உறுப்பினர்கள் இரண்டு பேருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் முறைப்பாடுகள் வந்துள்ளதாக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இருதரப்பினருக்கு இடைய…
தலவாக்கலை - லிந்துலை நகர சபைக்குள் நேற்று(09.07.2026) சபை உறுப்பினர்கள் இரண்டு பேருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் முறைப்பாடுகள் வந்துள்ளதாக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இருதரப்பினருக்கு இடையிலான மோதல்மலையக மக்கள் முன்னணியின் நகர சபை உறுப்பினர் ஒருவருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சபை உறுப்பினர் ஒருவருக்கும் இடையே இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.
இந்த இரு சபை உறுப்பினர்களுக்கும் இடையே சில காலமாக வாக்குவாதம் இருந்து வருவதாகவும், நேந்று(09) நடைபெற்ற மாதாந்த மாநகர சபைக் கூட்டத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் மற்றைய நகரசபை உறுப்பினர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியதன் பிறகு ஆத்திரமேலீட்டில் மலையக மக்கள் முன்னணி உறுப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கச் சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

