தங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக லித்துவேனியா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் முற்றிலுமாக மறுத்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக தங்களை இராணுவமயமாக்கிக் கொள்வதற்காகவே லித்துவேனியா இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட…
தங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக லித்துவேனியா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் முற்றிலுமாக மறுத்துள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக தங்களை இராணுவமயமாக்கிக் கொள்வதற்காகவே லித்துவேனியா இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக ரஷ்யா சாடியுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னதாகப் பேட்டியளித்த லித்துவேனியா ஜனாதிபதி கிட்டானஸ் நௌசேடா, தங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தங்களுக்கு உளவுத்துறைத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் ஆற்றல் மற்றும் போக்குவரத்து மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "மக்களை மூளைச்சலவை செய்து, நாட்டை மேலும் இராணுவமயமாக்குவதற்காகப் பரப்பப்படும் அச்சுறுத்தல் கதைகளின் சமீபத்திய வடிவமே இதுவாகும்.
இந்த நோக்கத்தை அடைவதற்காக, அவர்கள் மற்றொரு நாட்டை - இந்தச் சூழலில் எங்களது நாட்டை - எதிரியாகக் காட்ட வேண்டியுள்ளது.
இந்த சாக்கைப் பயன்படுத்தி பால்டிக் நாடுகளில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ உள்கட்டமைப்புகளை அவர்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.

