மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து, தற்போதைய மாலி அரசாங்கத்தைக் காப்பதற்காக ரஷ்யா அவசரமாக ஆயுதங்களை அனுப்பி வருகிறது. ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் மூலமாக இந்த ஆயுதக் கப்பல்கள் கொண்டு வரப்படுவதா…

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து, தற்போதைய மாலி அரசாங்கத்தைக் காப்பதற்காக ரஷ்யா அவசரமாக ஆயுதங்களை அனுப்பி வருகிறது.

ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் மூலமாக இந்த ஆயுதக் கப்பல்கள் கொண்டு வரப்படுவதாக அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.மாலியின் இராணுவ ஆட்சி

மாலியின் வடக்குப்பகுதியில் அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளும், துவாரெக் பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்களும் பல பகுதிகளைத் தீவிரமாக முற்றுகையிட்டு முன்னேறி வருகின்றனர்.

மாலியின் இராணுவ ஆட்சி கவிழ்ந்துவிடாமல் இருக்க ரஷ்யாவின் ஆதரவு பெற்ற படைகள் ஏற்கனவே அங்கு களமிறங்கியுள்ளன.

தற்போது வந்துள்ள புதிய ரஷ்ய ஆயுத விநியோகம், கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை முறியடிக்க மாலி இராணுவத்திற்குப் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருவதால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.