டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களிடையே டெங்கு பரவலைக்…
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களிடையே டெங்கு பரவலைக் குறைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த மேலதிக வழிகாட்டுதல்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சுகாதாரத் தரநிலைகளுக்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

