மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட முஸ்லிம் கலாசார போட்டியில் கல்முனை வலய மட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் சாய்ந்தமருது அல்-ஹிலால் பாட…

மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட முஸ்லிம் கலாசார போட்டியில் கல்முனை வலய மட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை மாணவர்கள் களிகம்பு (பொல்லடி) நிகழ்ச்சியில் பங்குபற்றி இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டனர்.

இம்மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தினால் இம்மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை பாடசாலையில் காலை கூட்டத்தில் வைத்து சான்றிதழ்கள் வழங்கி வழங்கப்பட்டன.

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களான எம்.எம்.எம். சல்பி, ஆர்.எம். றிவி, ஏ.எம்.அஹ்திர், ஆர். கம்ரான் அஹ்மத், எம்.என்.எம். மாயிஸ், என்.எம். நப்லான், எம்.எம்.றினாஸ், என்.எம்.அப்றி, எம்.ஏ. ஆபித் ஆகியோர் காலை கூட்டத்தில் வைத்து சக மாணவர்கள் முன்னிலையில் அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் மற்றும் பிரதி அதிபர்கள் பாடசாலையின் கலாசார நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பான ஆசிரியர் நாஸர் ஆகியோரினால் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இம்மாணவர்களைப் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எம்.ஸாகிர் மற்றும் சிரேஷ்ட அண்ணாவியார் ஏ.இஸ்ஸதீன் ஆகியோருக்கு பாடசாலையின் அதிபர் இதன்போது தமது நன்றியைத் தெரிவித்தார்.