நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து அகுணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது: குறித்த கைதி, செவ்வாய்க்கிழமை (07) இரவு 10.30 மணியளவில் அகுணகொலபெலஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து அகுணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
குறித்த கைதி, செவ்வாய்க்கிழமை (07) இரவு 10.30 மணியளவில் அகுணகொலபெலஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படும்போதே ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கைதி உயிரிழந்தமைக்கான சரியான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அகுணகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் விளைவாக, அங்கிருந்த பல கைதிகள் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்குப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அந்த இடமாற்றத்தின் ஒரு பகுதியாகவே இந்தக் கைதியும் அகுணகொலபெலஸ்ஸ சிறைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

