மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம்(11.07.2026) இரவு மேற்படி பெண், தனது வீட்டின் அருகிலுள்ள மற்றுமொரு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான தாக்குதல் ச…

மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம்(11.07.2026) இரவு மேற்படி பெண், தனது வீட்டின் அருகிலுள்ள மற்றுமொரு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த பெண்

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த அவர், உடனடியாக லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிவுலவாடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.