மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join -மூதூர் நிருபர்- மூதூர் -மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவன் இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வ…
மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
-மூதூர் நிருபர்-
மூதூர் -மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவன் இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் மூதூர் -கங்குவேலி கிராமத்தைச் சேர்ந்த சந்திரரூபன் ஜதுர்சன் (வயது 11) என தெரியவருகிறது.
குறித்த சிறுவன் குடும்பத்தினருடன் சமையலுக்கு சென்ற வேளை ஆற்றில் இறங்கிய போது நீரில் மூழ்கியுள்ளார்.
அவரை காப்பாற்றுவதற்கு குடும்பத்தினர் முயற்சித்தபோது பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

