மஹமோதரவில் புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், காலி…
மஹமோதரவில் புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது.
(54 ஆம் அத்தியாயமான) சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த கட்டளை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், “மஹமோதர” என்ற பெயரில் இந்த சிறைச்சாலை நிறுவப்படவுள்ளதுடன், இதன் அதிகாரப் பிரதேசம் முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

