போகஸ்ஹந்திய - புல்மோட்டை வீதியின் 2ஆம் கட்டை தூணிற்கு அருகில் போகஸ்ஹந்திய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அவரது மனைவி மற்றும் அவர்களுடன்…

போகஸ்ஹந்திய - புல்மோட்டை வீதியின் 2ஆம் கட்டை தூணிற்கு அருகில்  போகஸ்ஹந்திய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அவரது மனைவி மற்றும் அவர்களுடன் பயணித்த இரு பிள்ளைகளும் பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரணைஉயிரிழந்தவர் கல்லடி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.

இதேவேளை, அனுராதபுரம் - ரம்பேவ வீதியின் கல்வல சந்திக்கு அருகில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.