இந்தியா ஒடிசா மாநிலம், பாலாங்கீர் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறின் போது மனைவி வீசிய கைபேசி (மொபைல் போன்) கணவரின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவ…
இந்தியா ஒடிசா மாநிலம், பாலாங்கீர் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறின் போது மனைவி வீசிய கைபேசி (மொபைல் போன்) கணவரின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த மனைவி, தனது கைபேசியை கணவர் மீது வீசியுள்ளார். அது அவரது தலையில் பலமாக தாக்கிதில், அவர் படுகாயமடைந்தார். மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் காயமடைந்த கணவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரடைந்ததை அடுத்து, மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், அவர் வீட்டிற்குத் திரும்பிய உடனேயே, அவரது உடல்நிலை திடீரென மீண்டும் மோசமடைந்தது. குடும்பத்தினர் அவரை அவசர சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச் சென்றபோதிலும், மருத்துவர்களின் தீவிர முயற்சிகள் இருந்தும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம், உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

