மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குத் தேவையான ‘சி.ரி’ (CT) ஸ்கானர் இயந்திரம், இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக வழங்கப்படும் எனச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடந்த பாராளுமன்ற அமர்வில் எழுப்பிய…
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குத் தேவையான ‘சி.ரி’ (CT) ஸ்கானர் இயந்திரம், இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக வழங்கப்படும் எனச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடந்த பாராளுமன்ற அமர்வில் எழுப்பிய கேள்விக்கு புதன்கிழமை(08) அன்று சபையில் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சி.ரி ஸ்கானர் இயந்திரம் இல்லாத காரணத்தினால், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளைச் சரியான நேரத்தில் பரிசோதனை செய்ய முடியாமல் போவதோடு, நீண்ட தூரப் பயணங்களினால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் நிலவுவதாக வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியிருந்தார்.
நான் கடந்த 2025 ஏப்ரல் 24 அன்று மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது, ‘2026 ஆம் ஆண்டில் மன்னார் வைத்தியசாலைக்குக் கண்டிப்பாக சி.ரி ஸ்கானர் இயந்திரம் வழங்கப்படும்’ என உறுதியளித்திருந்தேன். அதற்கமைய, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இந்த இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்கு மதிப்பிடப்பட்டுள்ள 250 மில்லியன் ரூபா நிதியை, இவ்வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டுக்குள் வழங்குவதற்கு அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வாக்குறுதியின்படி, டிசம்பர் மாதத்திற்கு முன்னர் அந்த இயந்திரம் கையளிக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

