மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மின்சாரம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (19)வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.இந்தக் கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்…
மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மின்சாரம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (19)வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.இந்தக் கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்டத்தின் மின்சார வசதிகள், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.கலந்துரையாடல்
குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் மின்சார அபாயங்களைத் தடுக்கும் வகையில் மின் இணைப்புகளை பாதுகாப்பான முறையில் உயர்த்தி அமைப்பது, சிலாவத்துறை, முருங்கன் மல்வத்து ஓயா பாலம் அருகில் உள்ள மின் கேபிள் களின் பாதுகாப்பை மேம்படுத்துதல், தள்ளாடி கடற்கரை வீதியில் வீதி விளக்குகளை அமைப்பது , மடு பிரதேச செயலகப் பிரிவின் சோதி நகர் பகுதியில் மின்சார வசதி அற்ற குடும்பங்களுக்கு இலவச கிராமப்புற மின் மயமாக்கல் திட்டத்தின் கீழ் மின்சார இணைப்புகளை வழங்குவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட மறுசீரமைக்க தக்க எரிசக்தி திட்டங்கள் தொடர்பாகவும், மன்னார் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.இருப்பினும், மன்னார் தீவுக்கு வெளியேயான கொண்டாச்சி, முள்ளிக்குளம் போன்ற பகுதிகளில் தற்போது புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டு வருகின்றன.இலங்கையின் கனிம வளங்கள் தொடர்பாக ஒரு புதிய கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், அப்பகுதி மக்களுடன் கலந்தாலோசித்து, அந்த விவாதங்களின் முடிவுகளின் அடிப்படையில் இறுதி முடிவு எட்டப்படும்.என வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் மேலும் தெரிவித்தார்.

