மன்னார் நகர சபையினால் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் கோந்தைபிட்டி பகுதியில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் (18) காலை பயன்பாட்டிற்காக வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சப…

மன்னார் நகர சபையினால் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் கோந்தைபிட்டி பகுதியில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் (18) காலை பயன்பாட்டிற்காக வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் குறித்த மாடு அறுக்கும் மடுவத்தைத் திறந்து கையளித்தார்.

கடந்த காலங்களில் இந்த மாடு அறுக்கும் மடுவத்தில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டதாக நகர சபைக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக, குறித்த மடுவம் பல தடவைகள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

இந்நிலையில், மன்னார் நகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில், மாடுகளை நிலத்தில் வீழ்த்தி வெட்டாது, நவீன முறையில் சங்கிலியில் தொங்கவிட்டுச் சுத்தமான முறையில் வெட்டும் வகையில் இம்மடுவம் புனரமைக்கப்பட்டு, வைபவ ரீதியாக இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்ற மாடுகள், இம்மடுவத்தில் சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்பில், உரிய அனுமதி பெறப்பட்ட பின்னரே அறுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.