அம்பலாங்கொடை பகுதியில் மண்ணெண்ணெயில் இயங்கிய நான்கு பேருந்துகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நேற்று(07.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தீவிரம் அம்பலங்கொட பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி, பிரதம ஆய்வாளர் லங்காதேவ மற்றும் பிற அதிகாரிகள் இணைந்…

அம்பலாங்கொடை பகுதியில் மண்ணெண்ணெயில் இயங்கிய நான்கு பேருந்துகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நேற்று(07.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் தீவிரம் அம்பலங்கொட பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி, பிரதம ஆய்வாளர் லங்காதேவ மற்றும் பிற அதிகாரிகள் இணைந்து நடத்திய திடீர் சோதனையின் போதே இவ்வாறு பேருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பேருந்துகள், காலி- கொழும்பு மற்றும் அம்பலாங்கொடை- எல்பிட்டிய வழித்தடங்களில் இயங்கிக்கொண்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவற்றில் சில பேருந்துகள், முழுவதுமாக மண்ணெண்ணெய்யிலும், மண்ணெண்ணெய்க் கலவையிலும் இயங்கியது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பேருந்துகளின் சாரதிகள் கைது செய்யப்பட்டு, பலபிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் அம்பலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.