நுவரெலியாவில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் ஊற்றி இயக்கப்பட்ட மூன்று பேருந்துகளை பொலிஸார் மடக்கி பிடித்ததுடன், மேலதிக பரிசோதனைக்காக எரிபொருள் மாதிரிகளையும் அனுப்பியுள்ளனர். நுவரெலியா தலைமையக பொலிஸின் போக்குவரத்து பிரிவினர் நடத்திய விசேட சோதனையில், நானுஓயா, மார்காஸ்தோட்ட மற்றும் ப…

நுவரெலியாவில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் ஊற்றி இயக்கப்பட்ட மூன்று பேருந்துகளை பொலிஸார் மடக்கி பிடித்ததுடன், மேலதிக பரிசோதனைக்காக எரிபொருள் மாதிரிகளையும் அனுப்பியுள்ளனர்.

நுவரெலியா தலைமையக பொலிஸின் போக்குவரத்து பிரிவினர் நடத்திய விசேட சோதனையில், நானுஓயா, மார்காஸ்தோட்ட மற்றும் பொரலாந்த வழித்தடங்களில் இயங்கிய மூன்று பேருந்துகள் சிக்கின.

டீசல் விலை உயர்வு காரணமாக வாகனங்களில் மண்ணெண்ணெய் கலப்படம் செய்யப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறான முறைகேடுகள் வாகனத்தின் என்ஜினை படுத்தியடையச் செய்வதோடு, திடீர் தீ விபத்துகளுக்கும் வழிவகுக்கும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். ஆய்வறிக்கை வந்ததும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் எனவும், நுவரெலியாவில் இந்தச் சோதனைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.சதீஸ்