மறைந்த ஈரானியத் தலைவர் சையத் அலி கமெனிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 'WE Must Rise' (நாம் எழ வேண்டும்) என்ற தலைப்பிலான ஒரு மௌனப் போராட்டமொன்று கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் நடைபெற்றது.நேற்றையதினம்(6) 3:00 மணியளவில் நடைபெற்ற குறித்த நிகழ்வை'ஈ…

மறைந்த ஈரானியத் தலைவர் சையத் அலி கமெனிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 'WE Must Rise' (நாம் எழ வேண்டும்) என்ற தலைப்பிலான ஒரு மௌனப் போராட்டமொன்று கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் நடைபெற்றது.நேற்றையதினம்(6) 3:00 மணியளவில் நடைபெற்ற குறித்த நிகழ்வை'ஈரானுக்கான குரல்கள்' குழு ஏற்பாடு செய்திருந்தது.மௌனப் போராட்ட அஞ்சலி இந்த நிகழ்வில் மறைந்த ஈரானியத் தலைவர் சையத் அலி கமெனிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது நினைவையும், ஒற்றுமையையும், மரியாதையையும் வெளிப்படுத்துவதற்காகப் பங்கேற்பாளர்கள் மௌன அஞ்சலியொன்றையும் செலுத்தியுள்ளனர். முன்னாள் அமைச்சரும், இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (DLF) தலைவருமான வாசுதேவ நாணயக்கார, ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இந்த மௌனப் போராட்டத்தில் பங்கேற்றார்.

அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில், மௌனப் பங்கேற்பின் மூலம் தங்கள் செய்தியை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம் என இந்த ஒன்றுகூடல் குறித்து அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.