உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்திய முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அச்சுறுத்தலானது என ஐக்கிய மக்கள்…
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்திய முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அச்சுறுத்தலானது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.தற்கொலை குருநாகல் பகுதியில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை வரலாற்றில் முதன்முறையான சேவையில் இருந்த பொலிஸ்மா அதிபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டமை இதுவே முதன்முறையாகும்.முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அச்சுறுத்தலானது.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்கொலை செய்துக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதும் இருக்கவில்லை ஒன்று குறிப்பிடப்படுகிறது.அவ்வாறான பின்னணியில் இந்த மரணத்தை தற்கொலை என்று அடையாளப்படுத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். தற்போது சேவையில் உள்ள அரச சேவையாளர்களுக்கும், ஓய்வுப்பெற்ற சேவையாளர்களுக்கும் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இது முறையற்றதொரு செயற்பாடாகும். அரசாங்கம் இதற்கான காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

