மத்திய அதிவேக வீதியை எதிர்காலத்தில் கன்னொருவை வரை நீடிக்கும் திட்டத்துடனேயே அதன் கட்டுமானப் பணிகள் கலகெதர பகுதியில் நிறைவு செய்யப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய (09.07.2026) நாடாளுமன்ற அமர்வின்போது கண்டி மாவட்ட ந…
மத்திய அதிவேக வீதியை எதிர்காலத்தில் கன்னொருவை வரை நீடிக்கும் திட்டத்துடனேயே அதன் கட்டுமானப் பணிகள் கலகெதர பகுதியில் நிறைவு செய்யப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய (09.07.2026) நாடாளுமன்ற அமர்வின்போது கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், கண்டி நகரில் மேலும் பல வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.உட்கட்டமைப்பு பணிகள் கலகெதர வரை மட்டுமே தற்போதைக்கு நிர்மாணிக்கப்படவுள்ள மத்திய அதிவேகப்பாதையானது, எதிர்வரும் காலங்களில் கன்னொருவை வரை நீடிக்கப்படும் என்றும் அதற்கான உட்கட்டமைப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், சேதமடைந்த கொழும்பு - கண்டி மலையக பிரதான தொடருந்து பாதையின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2027ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

