ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து இன்று அதிகாலை (8) அமெரிக்கா சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது.தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம் தீவு, பண்டர் அப்பாஸ், கார்க் தீவு ஆகிய பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.ஈரானின் ரேடார் அமைப்பு, ஏவுகணை அமைப்பு, ஆயுத கிடங்குகள் உள்பட 80 இ…
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து இன்று அதிகாலை (8)
அமெரிக்கா சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது.தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம் தீவு, பண்டர் அப்பாஸ், கார்க் தீவு ஆகிய பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.ஈரானின் ரேடார் அமைப்பு, ஏவுகணை அமைப்பு, ஆயுத கிடங்குகள் உள்பட 80 இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.3 சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் இதனிடையே, ஓமன் வளைகுடா பகுதியில் ஹோர்மூஸ் நீரிணையை கடக்க முயன்ற 3 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.ஓமனின் லிமாஹ் பகுதியில் அருகே சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து இன்று அதிகாலை (8) அமெரிக்கா நடத்திய சரமாரி தாக்குதல்களை தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் இழுபறியில் உள்ள நிலையில், அமெரிக்க தாக்குதல்களுக்கு "பதிலடி" கொடுப்போம் என்று ஈரான் புதன்கிழமை அதிகாலையில் எச்சரித்த சிறிது நேரத்திற்கு பிறகு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

