ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் ஆறாவது கிளை மட்டக்களப்பில் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. புதிய கிளை திறப்பு விழாவில் நிறுவனத்தின் கௌரவத் தலைவரும் தேசபந்து, தேசமான்ய டாக்டர் கங்கானத் குமாரசிங்க, ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் நிறுவனத்…

ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் ஆறாவது கிளை மட்டக்களப்பில் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

புதிய கிளை திறப்பு விழாவில் நிறுவனத்தின் கௌரவத் தலைவரும் தேசபந்து, தேசமான்ய டாக்டர் கங்கானத் குமாரசிங்க, ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் செல்வி சது குமாரசிங்க உள்ளிட்ட பலர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அதிதிகளின் வரவேற்புடன் ஆரம்பமான நிகழ்வு, மதத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டதன் மூலம் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி சஞ்சீவ டி சில்வா, மதத் தலைவர்கள், நிறுவன அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களும் பங்கேற்றனர்.

நிகழ்வின் போது நிறுவனத்தின் எதிர்கால செயற்திட்டங்கள், பிராந்திய வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் விவசாயத் துறையின் மேம்பாடு தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

விவசாயிகள், முதலீட்டாளர்கள் மற்றும் பண்ணைத்துறை சார்ந்த அனைத்து தரப்பினரையும் ஒரே தளத்தில் இணைக்கும் நோக்குடன் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் செயற்பட்டு வருவதாகவும், அதன் ஊடாக நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதே நிறுவனத்தின் பிரதான இலக்காகும் என்றும் நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.