மட்டக்களப்பு நகரின் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சாம்பலானதுடன், ஐந்து கடைகள் சேதமடைந்துள்ளன. இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் தீ பரவியதையடுத்து, மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும்…

மட்டக்களப்பு நகரின் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சாம்பலானதுடன், ஐந்து கடைகள் சேதமடைந்துள்ளன.

இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் தீ பரவியதையடுத்து, மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் பொலிஸ் தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் நான்கு மணிநேர போராட்டத்தின் பின்னர், காலை 9.00 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீ விபத்தில் சென்றல் வீதியில் அமைந்திருந்த பல வியாபார நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.