மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி தற்கொலை முயற்சி வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் கழுத்து மற்றும் கையை கூர்மையான பொருளால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம…

மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி தற்கொலை முயற்சி

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் கழுத்து மற்றும் கையை கூர்மையான பொருளால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கைதியே இவ்வாறு காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற விசாரணைக்காக சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்ட குறித்த கைதி, மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட பின்னர் சிறைக்கூட்டில் இந்த முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.