மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி தற்கொலை முயற்சி : அவசர பிரிவில் அனுமதி! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை தன்னைத்தானே கழுத்தை…
மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி தற்கொலை முயற்சி : அவசர பிரிவில் அனுமதி!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்றை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் இத்தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சிறைச்சாலையினுள் வைத்து அவர் திடீரென தனது கழுத்தை அறுத்துக் கொண்டதை அடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளினால் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

