மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று பகல் இடம்பெற்றதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் இன்று முற்பகல் சுமார் 11.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆரம்பகட்ட தகவல்களின்படி, குறித்த நபர் பாலத்தின் மீது தன்னைத்த…
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று பகல் இடம்பெற்றதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் இன்று முற்பகல் சுமார் 11.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, குறித்த நபர் பாலத்தின் மீது தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அவதானித்த பொதுமக்களும் பொலிஸாரும் உடனடியாக தலையிட்டு அவரை மீட்டு, 1990 சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிர்காப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா, தாளையடி தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய மகேந்திரன் அருள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

