மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மட்டக்களப்பு நகரில் இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையில் மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த பகுதி நேற்றைய தினம் (09) துப்புரவு செய்யப்பட்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு நகரில் இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையில் மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த பகுதி நேற்றைய தினம் (09) துப்புரவு செய்யப்பட்டது.
இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையே கைவிடப்பட்ட நிலையிலிருந்த காணியில் காடுகளும் பெருமளவான பொலித்தின் குப்பைகள் மற்றும் ஏனைய கழிவுகளும் கொட்டப்பட்டு சுகாதாரத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும் நுளம்பு தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது.
இது தொடர்பில் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் பத்மநாதன் முருகதாஸின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இராணுவத்தினரும் இணைந்து இந்த துப்புரவு பணியை முன்னெடுத்தனர்.
புளியந்தீவு பகுதியில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்துச்செல்லும் டெங்கின் தாக்கத்தினை குறைப்பதற்கும் அதனை கட்டுப்படுத்துவதற்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகமும் ஏனைய திணைக்களங்கள், பாதுகாப்பு துறைகளும் இணைந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

