மட்டு.பெரிய உப்போடை கிராம சேவையாளர் அலுவலக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மட்டக்களப்பு மாநகர ச…

மட்டு.பெரிய உப்போடை கிராம சேவையாளர் அலுவலக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம்

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பெரிய உப்போடை கிராம சேவையாளர் அலுவலக வளாகத்தில் பாரிய சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வு பெரிய உப்போடை கிராம சேவையாளர் செல்வி விபுத்திக்கா தலைமையில் நடைபெற்றதுடன், மட்டக்களப்பு 11 வது சிங்கப் படைப்பிரிவு இராணுவ வீரர்கள் பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

சிரமதானப் பணிகளில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் கருணாகரன் கலிங்கா, கிராமிய அபிவிருத்திச் சங்கத் தலைவர் கரிதாஸ், சமுர்த்தி உத்தியோகத்தர் ரஜனி கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், இராணுவ உயரதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் அலுவலக வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுற்றுச்சூழலை தூய்மையாகப் பேணுவதன் அவசியம் குறித்து இதன்போது விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.