சுமார் 15 வருடங்களாக தங்கி இருந்த மனோ மாஸ்டரை யாருக்கும் தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை என்பதாலும், அவர் சிறந்த நிர்வாகி என்பதாலும் அவரே கருணாவின் அரசியல் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பணியினை மேற்கொண்டிருந்தார்.2004 ஆம் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி புலிகளுக்கு எதிரான ஒர…
சுமார் 15 வருடங்களாக தங்கி இருந்த மனோ மாஸ்டரை யாருக்கும் தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை என்பதாலும், அவர் சிறந்த நிர்வாகி என்பதாலும் அவரே கருணாவின் அரசியல் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பணியினை மேற்கொண்டிருந்தார்.2004 ஆம் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி புலிகளுக்கு எதிரான ஒரு புதிய சம்மேளனத்தை ஜேவிபி ஆரம்பித்திருந்தது.அந்த சம்மேளனத்தில் கருணா பெயரில் ஆரம்பிக்கப்பட்டு இருந்த அந்தப் புதிய அரசியல் கட்சியும் பங்குபற்றி இருந்தது.இதன்போது, கருணாவின் அரசியல் கட்சியின் சார்பில் மனோ மாஸ்டர் கலந்து கொண்டு இருந்தார்.இந்த மனோ மாஸ்டரை கொழும்பில் இருந்து வன்னிக்கு இரகசியமாக கடத்தி கொண்டு சென்றிருந்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.இதனையடுத்து, மனோ மாஸ்டர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டிருந்ததுடன் கருணாவின் அரசியல் கட்சியின் செயற்பாடு முற்றிலுமாக சிதைவடைந்து இருந்தது.மனோ மாஸ்டர் கொழும்பில் இருந்து எப்படி வன்னிக்கு கடத்தப்பட்டார் என்பது சுவாரசியமாக அதே வழி ஒரு பெண் மருத்துவப் போராளியின் திறமையை வெளிப்படுத்தும்படியான சம்பவம்.இந்த சம்பவம் தொடர்பான விரிவான தகவல்களை உண்மைகள் நிகழ்சியில் காணலாம்.

