நியூஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரு அணி வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் நேரத்தில் ஃபெர்ரான் டோ…
நியூஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரு அணி வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் நேரத்தில் ஃபெர்ரான் டோரஸ் அடித்த தீர்க்கமான கோலின் மூலம், ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றியது. இருப்பினும், இறுதி விசில் ஒலித்த பிறகு இரு அணி வீரர்களுக்கிடையே பதற்றமான சூழல் உருவாகி மோதல் ஏற்பட்டுள்ளது. வீரர்களுக்குள் வெடித்த மோதல் அப்போது, வெற்றியைக் கொண்டாட ஸ்பெயின் அணியின் மாற்று வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்தபோது, அர்ஜென்டினா தடுப்பாட்ட வீரர் நஹுயல் மொலினா, ஸ்பெயின் வீரர் ஒருவரை நோக்கி கை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அர்ஜென்டினா நடுப்பகுதி வீரர் லியாண்ட்ரோ பரேடெஸும் மோதலில் ஈடுபட்டார். இதன் காரணமாக, போட்டி முடிந்த பின்னர் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலர் அர்ஜென்டினா அணியின் நடத்தையை கடுமையாக விமர்சித்துள்ளனர். அர்ஜென்டினா அணியின் குற்றச்சாட்டுக்கள் இதற்கிடையில், வெற்றியாளர் பதக்கங்களையும் உலகக் கோப்பையையும் பெற்றுக்கொள்ள ஸ்பெயின் வீரர்கள் தயாரானபோது, அவர்கள் தங்களுக்கு முதுகு காட்டியதாக அர்ஜென்டினா அணி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், அர்ஜென்டினா தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, தங்கள் அணி தோல்வியை முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவும், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியும் என்றும் கூறி, வீரர்களின் செயல்பாட்டை நியாயப்படுத்தினார்.
இந்த இறுதிப் போட்டி ஆரம்பம் முதலே கடுமையான உடல்ரீதியான மோதல்களுடன் நடைபெற்றது. கூடுதல் நேரத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெளியேற்றப்பட்டதும் ஆட்டத்தின் பரபரப்பை மேலும் அதிகரித்தது.
உலக சாம்பியனான ஸ்பெயின் போட்டி முடிந்த பின்னர், அர்ஜென்டினா ரசிகர்கள் லியோனல் மெஸ்ஸியின் பெயரை முழக்கமிட்டபோது, அவர் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார்.
39 வயதான மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் தொடர்ந்து விளையாடுவாரா என்பது குறித்து இதுவரை எந்த உறுதியான அறிவிப்பும் வெளியிடவில்லை.இருப்பினும், இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியே அவரது கடைசி உலகக் கோப்பை ஆட்டமாக இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
நாக்-அவுட் சுற்றுகள் முழுவதும் தோல்வியின்றி ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி, உலக சாம்பியன் பட்டத்தை வென்று தனது வெற்றிப் பயணத்தை மகுடம் சூட்டியுள்ளது.Argentina should hang their heads in shame. Insufferable in victory against England and pathetic in defeat against Spain. Billions are watching and you chose to start a fight and disgrace your nation. Do better. #ArgentinaVsEspaña #ESPARG pic.twitter.com/VDAPixw5cv— Lewis Mackenzie (@Lewismac101) July 19, 2026

